சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது என  ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருவாரூர் மாவட்டப் பிரிவின் சார்பில் செப்.17-ஆம் தேதி முத்துப்பேட்டை ஒன்றியம், விளாங்காடு ஊராட்சியிலுள்ள கரையன்காடு கற்பகநாதர் கோயில் மைதானத்தில் ஆடவர், மகளிருக்கான கடற்கரை கால்பந்து, கடற்கரை வாலிபால் மற்றும் கடற்கரை கபடி ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
   போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. வாலிபால் விளையாட்டில் 2,  கால்பந்து விளையாட்டில் 5, கபடி விளையாட்டில் 6 நபர்கள் மட்டுமே ஒவ்வொரு அணியிலும் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். போட்டிகளில் வெற்றி பெறும் ஒவ்வொரு வீரருக்கும் ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.
   போட்டி  காலை 8 மணிக்கு தொடங்கும். காலை 7 மணிக்கு அணிகளை நேரடியாகப்  பதிவு செய்து கொள்ள வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 04366- 227158 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai