Enable Javscript for better performance
"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி செப். 15 -இல் தமிழகம் முழுவதும் பந்த்'- Dinamani

சுடச்சுட

    

    "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி செப். 15 -இல் தமிழகம் முழுவதும் பந்த்'

    By DIN  |   Published on : 13th September 2016 07:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் செப். 15 ஆம் தேதி 24 மணிநேர வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் தெரிவித்துள்ளது.
    நாகப்பட்டினத்தில் விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் துணைத் தலைவரும், காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் பொதுச் செயலருமான தனபாலன், செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
    தமிழகத்துக்கு 12 ஆயிரம் கன அடி நீரை தினசரி தர வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கர்நாடகத்தில் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபடுகின்றனர். உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத, இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது. அதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டுக் குழுவை அமைக்க காலம் தாழ்த்துவதே இதற்குக் காரணம். எனவே உடனடியாக இவைகளை அமைக்க வேண்டும். அத்துடன் கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள், அவர்களின் உடைமைகள் காக்கப்பட வேண்டும். ஒட்டுமொத்த டெல்டாவின் விவசாயம் காக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப். 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 24 மணி நேர வேலை நிறுத்தம் செய்யப்படும். வர்த்தகர்கள், லாரி உரிமையாளர்கள், அனைத்துக் கட்சி விவசாய சங்கங்களின் ஆதரவோடு இந்த பந்த் நடத்தப்பட உள்ளது என்றார்.
    பேட்டியின்போது காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், கீழ்வேளூர் ஒன்றியத் தலைவர் முருகு பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai