சுடச்சுட

    

    நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம் முன் கிராம உதவியாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகேயுள்ள கிராமத்தில் நடைபெற்ற மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற கிராம உதவியாளர்கள்  கன்னியப்பன், ராஜாராமன் ஆகியோர் மீது
    லாரியை ஏற்றி கொலை செய்த கொலையாளிகளைக் கைது செய்யக்கோரி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   வட்டத் தலைவர் வளர்மதி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்    சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் விஜயகுமார், முன்னாள் மாவட்ட இணை செயலாளர் ராமமூர்த்தி, மாநில துணைத் தலைவர் முருகையன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
      இறந்த கிராம உதவியாளர்களின் குடும்பத்துக்கு அரசின் நிவாரண நிதியாக தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். அவர்களது மனைவிக்கு அரசுப் பணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேவதாஸ் நன்றி கூறினார்.
    திருவாரூரில்...
     வேலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகளைக் கைது செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai