Enable Javscript for better performance
குடிநீர் வசதி செய்து கொடுக்க கோரி திருநங்கைகள் மனு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் அருகே குடிநீர் வசதி செய்து கொடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் திருநங்கைகள்  மனு அளித்தனர்.
    திருவாரூர் தியானபுரம் திருநங்கைகள் குடியிருப்பைச் சேர்ந்தவர் ரம்யா. இவர் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் அளித்த மனுவில், தியானபுரம் திருநங்கை குடியிருப்பில் 25 பேர் வசிக்கிறோம்.   எங்கள் பகுதியில் குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai