சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பழைமையான கோயில் குளத்தை திங்கள்கிழமை தூர்வாரும்போது 6 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
  திருமக்கோட்டை காவல்சரகத்துக்கு உள்பட்ட உக்காடுதென்பிரை கிராமத்தில் பழைமையான பெருமாள்கோயில் உள்ளது. இதன் அருகே இக் கோயிலுக்குச் சொந்தமான குளம் உள்ளது. இக்குளத்தை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் தூர்வாரும் பணி
  தொடங்கியது.
  இயந்திரத்திலிருந்து எடுக்கப்பட்டு கொட்டப்பட்ட மண்ணில் சிலை இருப்பதைக் கண்ட பொக்லைன் ஓட்டுநர் இதுகுறித்து கிராமத்தினருக்கு தகவல் அளித்தார். கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் மீண்டும் குளத்திலிருந்து மண் எடுத்தபோது மேலும் பல சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
   இதில் ராமர், சீதை, லட்சுமணர், கிருஷ்ணர், பரதர், ஆழ்வார் என ஆறு சுவாமி சிலைகளும் இவற்றுடன் சிறிய அளவிலான வில் அம்பு சிலையும் இருந்தன. இந்தச் சிலைகள் 2 அடி முதல் 4 அடி உயரம் வரையும் உள்ளன. ஒவ்வொன்றும் சுமார் 20 கிலோ முதல் 50 கிலோ எடையுடையதாக உள்ளன.
   இதுகுறித்து  கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்குமார் தகவலின் பேரில் நிகழ்விடத்துக்குச்  சென்ற மன்னார்குடி வட்டாட்சியர் கோ.மலர்கொடி, சுவாமி சிலைகளையும் வில் அம்பு சிலையையும் பார்வையிட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளித்தார்.
    இச்சிலைகள் எந்த வகை உலோகத்தால் ஆனது, எத்தனை ஆண்டுகள் பழைமையானவை  என்ற விவரங்கள் தொல்லியல்துறையினரின் ஆய்வுக்குப் பின் தெரியவரும் என தெரிவித்தார்.  பின்னர் அனைத்துச் சிலைகளும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai