சுடச்சுட

  

  சீர்காழியை அடுத்த புத்தூர் முதல் கொன்னக்காட்டுப்படுகை வரையிலான சாலையை சீரமைக்கக் கோரி, பொதுமக்கள், மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  புத்தூர் முதல் கொன்னக்காட்டுப்படுகை வரையில் 4 கி.மீ. தொலைவுக்கு சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாகத்தான் கீரங்குடி, கொன்னக்காட்டுப்படுகை, சோதியக்குடி,  சிதம்பரநாதபுரம் உள்ளிட்ட 6 கிராமங்களைச்  சேர்ந்த மக்கள் சென்று
  வருகின்றனர்.
  இச்சாலை கடந்த 2011-ஆம் ஆண்டு  அமைக்கப்பட்டது. அதன் பின்னர், சாலை செப்பனிடப்படாமல் குண்டும், குழியுமாக மாறி பழுதடைந்துக் காணப்படுகிறது. இதுகுறித்து  பலமுறை கோரிக்கை விடுத்தும் புதிய சாலை அமைக்கப்படவில்லை.
  புத்தூர் - கொன்னக்காட்டுப்படுகை வரையிலான சாலையை சீரமைக்கக் கோரி, சிதம்பரநாதபுரத்தில் திங்கள்கிழமை சாலை மறியல் நடைபெறும் என 6 கிராம மக்கள் சார்பில், அறிவிக்கப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
  அதன்படி, கிராம மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை சிதரம்பரநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையறிந்த வட்டாட்சியர் மலர்விழி, அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai