சுடச்சுட

    

    செப். 15 -இல் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்

    By DIN  |   Published on : 13th September 2016 07:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செப். 15 ஆம்  தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில்  இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது என அதன் தலைவர் பி. சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் கூறியிருப்பது: நாகை கால்நடை  மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செப். 15 ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
    பயிற்சியில் நாட்டுக்கோழி, இனங்கள், இடத்தேர்வு, கொட்டகை அமைக்கும் முறை, தீவன பராமரிப்பு, நோய்த் தடுப்பு, பண்ணை பொருளாதாரம் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும்.
    காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த முகாமில் பங்கேற்க விரும்புவோர் நேரிலோ அல்லது 04365-247123 என்ற எண்ணிலோ முன்னதாகவே, நாகை கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai