சுடச்சுட

    

    திருவாரூர் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பிக்பாக்கெட் அடித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
    திருவாரூர் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் மதியழகன் மகன் கணேஷ் (32). இவர்  ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் சென்று விட்டு பேருந்தில் திருவாரூர் வந்தார். பேருந்திலிருந்து இறங்கும்போது கணேஷ் சட்டை பையிலிருந்து ரூ.100-ஐ ஓர் இளைஞர் திருடியுள்ளார். இதையறிந்த கணேஷ் அந்த இளைஞரை கையும் களவுமாகப் பிடித்து திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
    போலீஸாரின் விசாரணையில் திருத்துறைப்பூண்டி விளக்குடி பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (31) என்பது தெரியவந்தது. இவரை கைது செய்து   விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai