சுடச்சுட

    

    முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் பிரதமரை சந்திக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

    By DIN  |   Published on : 13th September 2016 07:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி பிரச்னை குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் பிரதமரை சந்திக்க வேண்டுமென்றார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன்.
    திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியம், எரவாஞ்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சிக் கொடியேற்று விழாவில் பங்கேற்றபோது அவர் பேசியது:
    கட்சியை வலுப்படுத்த தொண்டர்கள் வீடுவீடாகச் சென்று இயக்கத்தை வளர்த்து உள்ளாட்சித் தேர்தலில் அதிகளவு வெற்றி பெற பாடுபடவேண்டும்.   
    காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றம் உடனடியாக தண்ணீர் திறக்க உத்தரவிட்டிருக்கிறது.  இதனால் கர்நாடகத்தினர் போராட்டம் நடத்தி வருவது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் மூன்று போகம் சாகுபடி இன்று ஒருபோகமாக மாறி விட்டது. இந்த ஒருபோகமான சம்பாவும் பொய்த்துப்போகும் நிலையில் விவசாயிகள் விளிம்பு நிலையில் தவித்து வருகின்றனர். இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    இதை மாற்ற தமிழக அரசு காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அத்துடன் தமிழ்நாடு, கர்நாடகம், புதுவை மாநில முதலமைச்சர்களை பிரதமர் அழைத்துப் பேச முன்வர வேண்டும்.
    விவசாயிகளின் அனைத்து வங்கி பயிர்க்கடன்களையும், மாணவர்களின் கல்விக்கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக அரசு போல் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் அழைத்துக்கொண்டு தமிழக முதல்வர்  தலைமையில் பிரதமரை சந்திக்க வேண்டுமென்றார் வாசன்.
    கட்சியின் மாவட்டத் தலைவர் குடவாசல் எஸ். தினகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் என்.ஆர். ரெங்கராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ், வட்டார தலைவர்கள் பெத்தாரண்ணன், ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     விழாவில், பிளஸ்-2-வில் முதல் மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் மருத்துவப்படிப்புக்கான அனுமதி கிடைத்ததற்கு மாணவி எஸ். அபிநயாவை பாராட்டி பரிசு வழங்கினார் வாசன்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai