சுடச்சுட

    

    முன்னாள் படைவீரர்கள் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 13th September 2016 02:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் மத்தியப் பாதுகாப்பு அமைச்சரின் விருப்புரிமை நிதி கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என  மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
     இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சரின் விருப்புரிமை நிதியிலிருந்து கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.12,000 வழங்கப்படுகிறது. முப்படைகளில் அவில்தார்  மற்றும் அதற்கு குறைவான தரத்திலுள்ள முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் வாரிசுகள் மட்டும் இத்திட்டத்தில் w‌w‌w.‌k‌sb.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

     மேற்கண்ட இணைய முகவரியில் முன்னாள் படைவீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்யும் போது தங்களது மாவட்டத்தை எது என்பதை தேர்ந்தெடுத்து பிறகு பெறப்படும் பயனர்  முகவரி (ன்ள்ங்ழ் ண்க்) மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை கொண்டே மத்திய பாதுகாப்பு அமைச்சரின் விருப்புரிமை நிதி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க இயலும்.

    இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம்.
    திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் வாரிசுகள் இக்கல்வி நிதியுதவியினைப் பெற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai