சுடச்சுட

    

    நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த  மூவலூரில், தமிழக சட்டப்பேரவையில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில், திமுக  பொதுக்கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    இக்கூட்டத்தில் கட்சியின் பேச்சாளர் ஐ. லியோனி பேசியது:
    தமிழக சட்டப்பேரவையில் நடக்கும்  நிகழ்வுகளை மக்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சட்டப்பேரவையின் மாண்பு காக்கப்பட வேண்டும். ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது. இவை இரண்டும் சரியாகச் செயல்பட்டால்தான் சட்டப்பேரவையில் ஜனநாயகம் காக்கப்படும். சட்டப்பேரவையானது விவாத மேடையாக இல்லாமல் பாட்டு மேடையாக மாறிவருகிறது என்றார் லியோனி.
    கூட்டத்துக்கு, கட்சியின் மயிலாடுதுறை (தெற்கு) ஒன்றியச் செயலர் எம். மூர்த்தி  தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்  கி. சத்தியசீலன், ஜெகவீரபாண்டியன், ஒன்றியச்  செயலர் (மயிலாடுதுறை வடக்கு) என். இளையபெருமாள், ஊராட்சி மன்றத் தலைவர்  காமாட்சி மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கூட்டத்தில், கட்சியின் நாகை (வடக்கு) மாவட்டச் செயலர் நிவேதா எம். முருகன், நாகை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா. அலெக்ஸாண்டர், மயிலாடுதுறை நகரச்  செயலர் குண்டாமணி (எ) செல்வராஜ், கட்சியின் செம்பனார்கோயில் ஒன்றியச் செயலர் எம். முசாகுதீன், குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் முன்னாள் தலைவர் ஆர். மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கட்சியின் இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் பி. சிவதாஸ் வரவேற்றார். மூவலூர் ஊராட்சி திமுக பிரதிநிதி பி. பிரேம்குமார் நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai