Enable Javscript for better performance
மேல்நிலைத் துணைத் தேர்வு: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் தேதி மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    மேல்நிலைத் துணைத் தேர்வு: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் தேதி மாற்றம்

    By DIN  |   Published on : 13th September 2016 07:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேல்நிலைத் துணைத் தேர்வுக்கு  சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்த தேதி மாற்றப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் கூறியிருப்பது: சிறப்பு  அனுமதி திட்டத்தின் கீழ் தேர்வெழுத செப். 14, 15 ஆகிய இரு நாள்களில் விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே  அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப். 14 ஆம் தேதி சில மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    எனவே செப். 15, 16 ஆகிய இரு நாள்களில்  மேல்நிலைத் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் நாகை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வர்கள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai