சுடச்சுட

    

    ரயில் கட்டண உயர்வுக்கு தட்சிண  ரயில்வே எம்ப்ளாய்ஸ் யூனியன் எதிர்ப்பு

    By DIN  |   Published on : 13th September 2016 07:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரயில் கட்டண உயர்வுக்கு தட்சிண ரயில்வே எம்ப்ளாய்ஸ் யூனியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.     
    இதுதொடர்பாக தட்சிண ரயில்வே எம்ப்ளாய்ஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மன்னை மனோகரன் நீடாமங்கலத்தில் திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:   ரயில்வேதுறை விரைவு ரயில்களின் ஏசி வகுப்பு கட்டணங்களை உயர்த்தியுள்ளது. கட்டண உயர்வால் ரயில்வேதுறை எதிர்பார்க்கும் லாபம் ரூ.500 கோடி என்பது கணக்கின் அடிப்படையிலானது மட்டுமே.
     நடைமுறையில் உயர் வகுப்பு பயணிகள் போக்குவரத்து சந்தையை ரயில்வே இழக்க நேரிடும். மேலும் காலப்போக்கில் ஏசி இரட்டை அடுக்கு ரயில்களைப்போல் ஆதரவு இல்லாமல் நஷ்டம் ஏற்படக்கூடும். எனவே, கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai