Enable Javscript for better performance
வளவனாற்றை சீரமைக்கக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    வளவனாற்றை சீரமைக்கக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்

    By DIN  |   Published on : 13th September 2016 07:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி கடைமடைப் பகுதியின் வடிகால் ஆறான வளவனாற்றை சீரமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி சார்பிலான விவசாயிகள் திங்கள்கிழமை   புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட 6 இடங்களில் சாலைமறியல் செய்தனர்.
    வளவனாற்றை  சீரமைக்க வலியுறுத்தி விவசாயிகள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.  உடனடியாக தூர்வாரப்படா விட்டால், நிகழாண்டு மழைக்காலத்தில் பெரும் வெள்ளச்  சேதம் ஏற்படும் அபாயநிலையைக் கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில்  சீரமைக்க வலியுறுத்தி சாலைமறியல் நடைபெற்றது.
    திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில்  சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கே.உலகநாதன், சி.பி.ஐ. மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி.வி.சந்திரராமன், ஒன்றியச் செயலர் அ.பாஸ்கர், நகர செயலர் எம்.முருகேசன், விவசாயிகள் சங்கத் தலைவர் எல்.பக்கிரிசாமி  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    கிழக்கு கடற்கரைச் சாலையில் பாண்டி- வேதாரண்யம் சாலையில் மேலமருதூர், பிச்சன்கோட்டகம், நெடும்பலம் உள்ளிட்ட 6 இடங்களில் சாலை மறியல்
    நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai