Enable Javscript for better performance
வாடகையில்லாமல் காலனி வீட்டை வழங்கக் கோரி மனு- Dinamani

சுடச்சுட

    

    வாடகையில்லாமல் காலனி வீட்டை வழங்கக் கோரி, கூடை முடைவோர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    இதுகுறித்து கூடை முடைவோர் நிலாக்குழுத் தலைவர் எஸ். ராணி தலைமையில் நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமியிடம் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:
    கூடைமுடைவோர் காலனியில் 117 குடும்பங்கள் வசித்து வந்தோம். தற்போது காலனி கட்டும் பணி நடைபெற்று வருவதால், அனைவரும் வெளியில் வாடகைக்கு வசித்து வருகிறோம். இந்நிலையில், அதிகாரிகள் சிலர் 4 ஆண்டுகளாக வீட்டு வாடகையாக ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை கேட்கின்றனர். இதுகுறித்து  முதல்வர், அமைச்சர் உள்ளிட்டோருக்கு மனுக்கள் அனுப்பியிருந்தோம். அவர்கள் தரப்பில் வாடகையை நாங்கள் தர வேண்டும்  எனக் கூறப்பட்டது. ஆனால் அதிகாரிகள் நாங்கள் வாடகையை கட்டியே ஆக வேண்டும் என நிர்பந்திக்கின்றனர்.
    மழைக்காலம் வர உள்ளது. வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், வயதுக்கு வந்த பெண்கள் இவர்களை வைத்துக்கொண்டு வெளியில் வசிப்பது சிரமமாக உள்ளது. ஆகவே, மழைக்காலத்துக்கு முன்பே எவ்வித வாடகையும் இல்லாமல், எங்களுக்கு காலனி வீட்டை வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai