Enable Javscript for better performance
வேன் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 3 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பூர் அருகே திங்கள்கிழமை பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற  வேன் வாய்க்காலில் கவிழ்ந்தில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
    மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கிளியனூர், எடக்குடி, மங்கைநல்லூரில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். திங்கள்கிழமை காலை 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு தனியார் வேன் மயிலாடுதுறைக்கு சென்று கொண்டிருந்தது. மங்கைநல்லூர் ரயில்வே பாதையை கடக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் 3 காயமடைந்த மாணவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்ற மாணவர்கள் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர். இதுகுறித்து பெரம்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai