சுடச்சுட

    

    கர்நாடக மாநில அரசைக் கலைக்க வேண்டும்: இந்திய தேசீய லீக் கோரிக்கை

    By DIN  |   Published on : 14th September 2016 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் வகையில் கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய, கர்நாடக அரசை உடனடியாகக் கலைக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஜி.கே. நிஜாமுதீன் கேட்டுக்கொண்டார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதற்காக கர்நாடக மாநிலத்தில் நிகழும் வன்முறைகள், இந்திய ஒருமைப்பாட்டுக்கு சவாலாக அமைந்துள்ளன. கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் கடும் கண்டனத்துக்குரியவை. இந்த வன்முறைகளை தடுக்கத் தவறிய கர்நாடக அரசு உடனடியாக கலைக்கப்பட வேண்டும். கேரளம், ஆந்திரம், கர்நாடகம் என 3 மாநிலங்களும், தமிழகத்தின் தண்ணீர் உரிமையை மறுப்பதும், தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் இந்திய ஒருமைப்பாட்டின் மீது தமிழர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சிதைக்கச் செய்வதாக உள்ளது. மத்திய அரசு மெளனம் சாதிப்பதும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததும் கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai