சுடச்சுட

    

    நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிகளுக்கு செப். 27-ஆம் தேதிக்குள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    வேதாரண்யம் வட்டத்தில் காலியாக உள்ள 11 கிராம உதவியாளர் பணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.
    விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது வரம்பு- 21. அதிகபட்ச வயது வரம்பு- பொதுப் பிரிவினருக்கு 30, இதர பிரிவினருக்கு 35. குறைந்தபட்ச கல்வித் தகுதி 5-ஆம் வகுப்பு தேர்ச்சி. அதிகபட்ச கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி.
    தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரம், கல்வித் தகுதிச் சான்று, குடும்ப அட்டை, சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, முன்னுரிமை கோருவதற்கான சான்று ஆகியவற்றின் நகல்களை இணைத்து, செப். 27-ஆம் தேதி மாலை 5 மணிக்குள், வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai