சுடச்சுட

    

    சீர்காழியை அடுத்த அரசூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்தனர்.
    சீர்காழி பகுதியில் தனியார் பேருந்துகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும், பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளிலும் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு இயக்கப்படுவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதுடன் உயிரிழப்புகளும் தொடர்கின்றன.
    இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சீர்காழியிலிருந்து சிதம்பரம் நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து ஒன்றை அரசூர் புறவழிச்சாலை மூன்று சந்திப்பில் பொதுமக்கள் சிறைபிடித்தனர். பின்னர், பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, நகர் பகுதிகளில் அதிவேகமாக வாகனங்களை இயக்கக் கூடாது என எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
    இதனால், மயிலாடுதுறை - சிதம்பரம் சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai