சுவாமி சிலையிலிருந்த தங்கத் தாலி திருட்டு
By DIN | Published on : 14th September 2016 08:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
குத்தாலம் அருகே கோயிலில் சுவாமி சிலையிலிருந்த தங்கத் தாலி திருட்டுப்போனது செவ்வாய்க்கிழமை அதிகாலை தெரியவந்தது.
பாலையூரை அடுத்த கரைகண்டம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பூசாரியான கணேசன், செவ்வாய்க்கிழமை அதிகாலை கோயிலை திறக்கவந்தபோது, கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்தார். மேலும், சுவாமி சிலையின் கழுத்திலிருந்த 8 கிராம் எடையுள்ள தங்கத் தாலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதேபோல், கரைகண்டம், கிழக்காவட்டம், கத்தரிமூலை ஆகிய இடங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் வெளிப்புறம் வைக்கப்பட்டிருந்த காணிக்கை உண்டியல்களையும் மர்ம நபர்கள் உடைத்து திருடிச் சென்றது தெரியவந்தது.