சுடச்சுட

    

    செப்.15 -இல் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

    By DIN  |   Published on : 14th September 2016 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செம்பனார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் செப். 15 ஆம் தேதி, தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என சமூக பாதுகாப்புத் திட்ட  தொழிலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து அந்த அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
    சென்னை, தொழிலாளர் ஆணையம் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் உறுப்பினர் சேர்க்கையை அதிகமாக்கும் பொருட்டு, உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் செம்பனார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் செப். 15 ஆம் தேதி காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
    கட்டுமானம் மற்றும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த முகாமை பயன்படுத்தி நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து பயன்பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai