சுடச்சுட

    

    கல்வித்துறை மற்றும் சமூக வலைதளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா மதிமுக தஞ்சை மண்டல மாணவரணி சார்பில், மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    விழாவுக்கு, கட்சியின் நாகை மாவட்டச் செயலர்  ஏ.எஸ். மோகன் தலைமை வகித்தார். மாவட்ட முன்னாள் செயலர் மா. மகாலிங்கம், மாவட்ட  நிர்வாகிகள் ப. தங்கையன், கே.எஸ். பன்னீர்செல்வம், ஒன்றியச் செயலாளர்கள் சி. கொளஞ்சி என். சுரேஷ், ஆர்.என். வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற  விழாவில், கல்வித்துறை மற்றும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்ட 12 பேர் தேர்வு செய்யப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டன.
    கட்சியின் விவசாய அணி மாநிலச் செயலர் ஆடுதுறை முருகன், மாணவர் அணி மாநிலச் செயலாளர் மணவை. தமிழ் மாணிக்கம், மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாநில அமைப்பாளர் பால. சசிகுமார் ஆகியோர் விழாவில் பங்கேற்று, விருதுகளை வழங்கினர்.
    விழா ஏற்பாடுகளை மாணவர் அணி மாநில துணைச் செயலர் பா.த. ஆசைத்தம்பி, மாவட்ட அமைப்பாளர் பாலமுருகன் (நாகை), ராமச்சந்திரன் (திருவாரூர்) உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    கட்சியின் மயிலாடுதுறை நகரச் செயலர் மார்க்கெட் எஸ். கணேசன் வரவேற்றார். ஒன்றியச் செயலர் கே.ஆர். செல்வம் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை தமிழாசிரியர் விழிகள் ராஜ்குமார்  தொகுத்து வழங்கினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai