மயிலாடுதுறை பசுபதீசுவரர் கோயிலில் இன்று குடமுழுக்கு
By DIN | Published on : 14th September 2016 08:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மயிலாடுதுறை வட்டம், வள்ளாலகரம் ஊராட்சிக்குள்பட்ட சேந்தங்குடி பசுபதீசுவரர் கோயிலின் மஹா குடமுழுக்கு விழா புதன்கிழமை (செப். 14) நடைபெறவுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பழைமைவாய்ந்த இக்கோயில் சிதிலமடைந்த நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி வாழ் மக்களின் முயற்சியால் கடந்த 3 ஆண்டுகளாக இக்கோயில் திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இக்கோயிலின் திருப்பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இக்கோயிலின் குடமுழுக்கு விழா புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடைபெறவுள்ளது.