சுடச்சுட

    

    வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தொடர் வாகனத் தணிக்கையின்போது வரி வசூல் மற்றும் இணக்கக் கட்டணமாக ரூ. 2.01 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
    சென்னை, போக்குவரத்து ஆணையர், நாகை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, வேளாங்கண்ணி பெருவிழாவையொட்டி, நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கடந்த ஆக. 28-ஆம் தேதி முதல் செப். 8-ஆம் தேதி வரை தொடர் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பா. ஜெயபாஸ்கரன் தலைமையில், தஞ்சாவூர் சரகத்துக்குள்பட்ட பகுதிகளின் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், செயலாக்கப் பணி அலுவலர்கள் அடங்கிய சிறப்புத் தணிக்கைக் குழுவினர் இந்தத் தணிக்கையை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின்போது 342 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டன. 13 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.
    அனுமதியில்லாத, வரி செலுத்தாத வாகனங்கள், பதிவு செய்யப்படாத வாகனங்கள், மாற்றுப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமான ஆள்களை அழைத்துச் சென்ற வாகனங்கள், அளவுக்கு அதிகமான எடையை ஏற்றிச் சென்ற வாகனங்கள், சாலை விதிகளுக்குப் புறம்பாக இயக்கப்பட்ட வாகனங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கைக்கு உள்படுத்தப்பட்டன.
    இந்தத் தணிக்கையின்போது, பல்வேறு வாகனங்களுக்கு இணைக்கக் கட்டணம் விதிக்கப்பட்டு ரூ. 1.81 லட்சம் இணக்கக் கட்டணமாக வசூல் செய்யப்பட்டது. இதைத் தவிர, வரியாக ரூ. 20,793 வசூலிக்கப்பட்டது என நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai