சுடச்சுட

    

    தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சீர்காழி வட்டக் கிளை புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    புதிய நிர்வாகிகள்: தொடர்ந்து மூன்றாவது முறை தலைவராக - வி. மணிவண்ணன் மற்றும்  செயலர் - ஏ. கருணாகரன், பொருளாளர் -  ஜெ. வெங்கடேசன் ஆகியோர்  பொறுப்பேற்றுக்கொண்டனர்.
    புதிய பொறுப்பாளர்களுக்கு நாகை மாவட்டத்  தலைவர் த. அமிர்தகுமார் பதவிப் பிரமாணம்  செய்துவைத்தார். தொடர்ந்து, துணைத் தலைவர்களாக இரா. தமிழ்வாணன், டி.ஆர். செந்தில்நாதன், வி. ரவி, ஆர். பாபுஜி, புஷ்பலதா மற்றும் இணைச் செயலர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  பொறுப்பேற்றுக்கொண்டனர். இதில் சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி பங்கேற்று, புதிய நிர்வாகிகளை  பாராட்டிப் பேசினார்.
    நிகழ்ச்சியில், பால்சாமி நாடார் கல்வி அறக்கட்டளை தலைவர் மா. ராமர், பஸ் அதிபர்  ஆர். மோகன்தாஸ், பொறியாளர்  செல்வக்குமார், ரோட்டரி சங்கத் தலைவர்  சிவகுரு, அரிமா சங்கத் தலைவர் துரை, ஆசிரியர் மன்றச் செயலர் செல்வம் உள்ளிட்ட
    பலர்  பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai