சுடச்சுட

    

    சீர்காழி அருகே புதன்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் 10 மாத ஆண் குழந்தை இறந்தது. அதில் பயணம் செய்த 5 பேர் காயமடைந்தனர்.
    சீர்காழியை அடுத்த மடவாமேடு மீனவர் தெருவைச் சேர்ந்தவர்கள் சுந்தராம்பாள் (48), சந்திராம்பாள் (65), ரா. அருணா (20), கண்ணகி (24), நந்தினி (30) மற்றும் அருணாவின் 10 மாத ஆண் குழந்தை ஹர்சன் ஆகியோர் உறவினர் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக மடவாமேடு கிராமத்திலிருந்து, பூம்புகாருக்கு ஆட்டோவில் சென்றனர்.
    ஆட்டோ கூழையார் பகுதியில் சென்றபோது, மணல்திட்டில் ஆட்டோ சிக்கிக் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணித்த  குழந்தை ஹர்சன் உள்ளிட்டோரை அருகிலிருந்தவர்கள்  மீட்டு, சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களில் குழந்தை ஹர்சனை மேல் சிகிச்சைக்காக  சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே குழந்தை இறந்தது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai