இருசக்கர வாகனத்தில் சேலை சிக்கி விபத்து: பெண் சாவு
By DIN | Published on : 15th September 2016 07:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வேளாங்கண்ணி அருகே புதன்கிழமை இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சேலை சிக்கியதில் காயமடைந்த பெண் இறந்தார்.
திட்டச்சேரி, ப.கொந்தையைச் சேர்ந்தவர் முகம்மது நபி மகன் செய்யது ரபீக். செய்யது ரபீக் மனைவி பதுர்நிஷா (30). கணவன், மனைவி இருவரும் புதன்கிழமை காலை பரவை மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது ரெட்டாலடி அருகே வரும்போது பதுர்நிஷாவின் சேலை, இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியது. இதில் நிலை தடுமாறிய பதுர்நிஷா, இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பதுர்நிஷா, அங்கு இறந்தார்.இதுகுறித்து வேளாங்கண்ணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.