Enable Javscript for better performance
இலங்கை தம்பதிக்கு 8 ஆவது முறையாக செப். 28 வரை காவல்நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    இலங்கை தம்பதிக்கு 8 ஆவது முறையாக செப். 28 வரை காவல்நீட்டிப்பு

    By DIN  |   Published on : 15th September 2016 07:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாவட்டம்,  கோட்டூர் அகதிகள் முகாமிலிருந்து கோடியக்கரை கடல் வழியாக சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்குச் செல்ல முயன்ற தம்பதிக்கு 8-ஆவது முறையாக செப். 28 வரை காவல்நீட்டிப்பு செய்து வேதாரண்யம் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
    இலங்கை வவுனியா மாவட்டம், கல்விட்டைசந்தி, மகாரம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் துஷ்வந்த் (23), இவரது மனைவி துவாரகா. இவர்களது ஒன்றரை வயது குழந்தை சகிதா.
    இவர்கள் மூவரும் நாகை மாவட்டம், கோடியக்கரையிலிருந்து 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் கண்ணாடி இழைப் படகு ஒன்றில் தவித்தபோது, கடந்த ஜூன் 11-ஆம் தேதி நாகை மீனவர்களால் மீட்கப்பட்டனர். பின்னர், வேதாரண்யம்  கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டதில், இத்தம்பதி கோவை மாவட்டம், கோட்டூரில் உள்ள இலங்கை  அகதிகள் முகாமிலிருந்து தப்பி, சட்ட விரோதமாக படகில் இலங்கைக்கு செல்ல முயன்றது தெரியவந்தது.
    இதையடுத்து, இவர்கள் மீது இந்திய  கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வேதாரண்யம் குற்றவியல்  நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    இதனிடையே, கோட்டூர் பகுதியில் நடைபெற்ற சில குற்ற வழக்குகள், விபத்து  வழக்குகளில் துஷ்வந்துக்கு தொடர்பு  இருப்பதாக தனிப்பிரிவு போலீஸார்  நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
    இவர்களுக்கு, ஏற்கெனவே 7 முறை காவல்நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், வேதாரண்யம் நீதிமன்றத்தில் புதன்கிழமை மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 8-ஆவது முறையாக செப். 28 வரை காவல்நீட்டிப்பு செய்து நீதிபதி தீனதயாளன் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் சென்னை புழல் சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai