சுடச்சுட

    

    "உரிமம் பெறாமல் உணவுப் பொருள்கள் விற்றால் நடவடிக்கை'

    By DIN  |   Published on : 15th September 2016 07:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பதிவு சான்று அல்லது உரிமம் இல்லாமல் உணவு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் தெரிவித்தார்.
    நாகை பெரிய கடைத்தெருவில் உள்ள உணவு விற்பனை நிறுவனங்களுக்குச் சென்று, உரிமம் பெற வேண்டியது தொடர்பான அறிக்கையை (நோட்டீஸ்) புதன்கிழமை வழங்கி அவர் கூறியது:
    உணவு விற்பனையாளர்களுக்கான உரிமம் அல்லது பதிவு சான்று பெறுவதற்கான காலக்கெடு ஆக. 4 ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. உணவு விற்பனையில் ஈடுபட்டிருக்கும் தேனீர், காபி, பலகாரக் கடை, ஹோட்டல்கள், பேக்கரிகள், ஸ்வீட், காய்கறிக் கடை, ஆடு, மாடு, கோழி கறி விற்பனைக் கடை, மீன் விற்பனை செய்வோர், சாலையோர உணவு விற்பனையாளர்கள், திருமண மண்டபங்கள், சமையல் தொழில் செய்வோர், அடைக்கப்பட்ட உணவுப் பொருள்கள்  தயாரிப்போர், சத்துணவு, ஊட்டச்சத்து மையங்கள்,  நியாயவிலைக் கடைகள் அன்னதான மையங்கள், மொத்த விற்பனை ஏஜன்ஸிகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் உணவுப் பொருள்களை விற்பனை செய்ய உரிமம் பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.
    எனவே உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ளோர் நாகை அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தையோ அல்லது 94422 14055 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கும் விவரம் அறியலாம்.
    ஆண்டுக்கு ரூ. 12 லட்சத்துக்குள் உணவு விற்பனை செய்யப்பட்டால் ரூ. 100, அதற்கு அதிகமாக இருந்தால் ரூ. 2,000 என தங்கள் தயாரிப்பு அளவுக்கு ஏற்ப தொகையை கருவூலத்தில் செலுத்தி, நிழற்படம், அடையாள அட்டை நகல் மற்றும் தேவையான ஆவனங்களுடன் தாங்களே ஆன் லைனிலோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம். உரிமம் அல்லது பதிவு சான்று பெறாத நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியின்போது, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆர். மஹாராஜன் (நாகை), ஆ. சதீஸ் (கீழ்வேளூர்) ஆகியோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai