சுடச்சுட

  

  உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

  By DIN  |   Published on : 15th September 2016 07:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, நாகை மாவட்ட  வாக்குச்சாவடிகளின் இறுதிப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
  உள்ளாட்சித் தேர்தலையொட்டி, செப். 7-ஆம்  தேதி வரைவு வாக்குச்சாவடிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியல் தொடர்பாக செப். 10-ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மக்களவை  உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
  இந்தக் கூட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து செப். 12-ஆம் தேதிக்குள் இறுதி கருத்துருகள் அளிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
  இந்தக் கருத்துகளின் அடிப்படையில், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் 4 வாக்குச் சாவடிகளும், சீர்காழி மற்றும் குத்தாலம் ஊராட்சி ஒன்றியங்களில் தலா 2 வாக்குச்சாவடிகளும், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் 11 வாக்குச்சாடிகளும் மாற்றம் செய்யப்பட்டன.
  வாக்குச்சாவடிகளின் இறுதிப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தலைமை வகித்து, மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு அமைக்கப்படவுள்ள 2,344 வாக்குச் சாவடிகளின் இறுதிப் பட்டியலை வெளியிட்டார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம். துரை, மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துமாரி ஆகியோர் பட்டியலின் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai