சுடச்சுட

  

  தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து, நாகையில் வர்த்தக நிறுவனங்கள் இயங்காது என இந்திய வர்த்தக தொழிற்குழுமம்  அறிவித்துள்ளது.
  நாகப்பட்டினத்தில் இந்திய வர்த்தக தொழிற் குழுமத்தின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் எஸ். சாகுல் அமீது தலைமை வகித்தார். கூட்டத்துக்குப் பின் தலைவர் எஸ். சாகுல் அமீது, செயலர் ஜி. மனோகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்துக்கு காவிரி நீரை, கர்நாடக அரசு திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதுடன், அவர்களது பொருள்களும் சேதப்படுத்தப்படுகின்றன. இதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் செப். 16 ஆம் தேதி முழுநேர வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  அதன்படி, நாகப்பட்டினத்தில் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து சுமார் 2500-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் இயங்காது. இந்த வேலை நிறுத்தத்தில் இந்திய வர்த்தக தொழிற்குழுமம் மற்றும் 3-க்கும் மேற்பட்ட இணைப்புச் சங்கங்களும் முழுமையாகப் பங்கேற்கும் என்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai