Enable Javscript for better performance
கர்நாடக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாகப்பட்டினத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் தமிழர்களும், தமிழர்கள் வசித்த வீடுகளும் தாக்குதலுக்கு உள்ளாயின. இதைக் கண்டித்து நாகப்பட்டினம் அவுரித்திடலில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வன்முறையை கட்டுப்படுத்தாத கர்நாடக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உருவபொம்மை, உருவப் படங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ராஜா தலைமை வகித்தார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai