Enable Javscript for better performance
கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து 5 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே புதன்கிழமை அதிகாலை கார் ஆற்றுக்குள் கவிழ்ந்ததில், 5 பேர் காயமடைந்தனர்.
    திருவாரூர் மாவட்டம், கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (60). இவரது உறவினரான ரஞ்சிதம்மாள் அண்மையில் காலமானார். 16-ஆம் நாள் நடத்த வேண்டிய காரியங்களை கோடியக்கரை கடற்கரையில் செய்து திதிக் கொடுக்க உறவினர்கள் திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து, பூஜை பொருள்களை எடுத்துக்கொண்டு புதன்கிழமை அதிகாலை கோடியக்கரைக்குச் செல்ல கார் ஒன்றில் பயணித்தனர். காரை கோட்டூர் பகுதியைச் சேர்ந்த தங்கையன் மகன் குமரேசன் (27) ஓட்டினார். காரில், கோவிந்தராஜ், அவரது மனைவி சிவகாமி (52), விஸ்வநாதன் (65), திதிக் கொடுக்கும் பூஜை  செய்யும் திருக்குவளை, சமத்துவப்புரம் பகுதியைச் சேர்ந்த உ. சம்பந்தம் (62) ஆகியோர் இருந்தனராம்.
    வாய்மேடு வழியாக வேதாரண்யம் சாலையில் சென்றுகொண்டிருந்த கார், அதிகாலை 5 மணியளவில் மருதூர் இரட்டைக்கடை வீதிக்கு அருகே மானங்கொண்டான் ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இதில் காரில் சென்ற 5 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இவர்களில் கோவிந்தராஜ், விஸ்வநாதன், சிவகாமி ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஓட்டுநர் குமரேசன், சம்பந்தம் ஆகியோர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
    இதுகுறித்து வாய்மேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai