நாகை, நரிமணம் கோயில்களில் கும்பாபிஷேகம்
By DIN | Published on : 15th September 2016 07:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நாகை, திருமருகல் பகுதிகளில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றன.
நாகை, கீரைக்கொல்லைத்தெரு, ஸ்ரீமகாருத்திர காளியம்பாள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, புதன்கிழமை காலை 4 மணியளவில் யாகசாலை பூஜைகள் தொடங்கின. பின்னர், காலை 6 மணியளவில் பூர்ணாஹுதியும், அதைத் தொடர்ந்து, கடங்கள் புறப்பாடும் நடைபெற்றன. காலை 7 மணியளவில் விமான கும்பாபிஷேகமும், அடுத்து மூலவர் கும்பாபிஷேகமும் நடைபெற்றன.
இதேபோல், திருமருகல் அருகே நரிமணம், மன்மத சுவாமி கோயிலில் திருப்பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி புதன்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கி, 7.15 மணியளவில் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்று, அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டன.