சுடச்சுட

  

  காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்துக்குத் துரோகம் இழைக்கும் கர்நாடக மாநிலத்தைக் கண்டித்து, செப். 16-ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலர்  எம்.ஜி.கே. நிஜாமுதீன் வெளியிட்ட அறிக்கை:
  காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்துக்குத் துரோகம் இழைக்கப்படுவதையும், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதையும் கண்டித்து செப். 16-ஆம் தேதி தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
  தமிழக நலன் கருதி இந்தப் போராட்டம் நடத்தப்படுவதால், முழு அடைப்புப் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்க இந்திய தேசிய லீக் கட்சி தீர்மானித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai