சுடச்சுட

    

    100 நாள் வேலைத் திட்ட ஊதியத்தை வழங்கக் கோரி சாலை மறியல்

    By DIN  |   Published on : 15th September 2016 07:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான ஊதியத் தொகையை வழங்கக் கோரி, கீழ்வேளூர் அருகே  தேவூர் கடைவீதியில் புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
    வெண்மணி, ராதாமங்கலம், இருக்கை, வண்டலூர் ஆகிய ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றிய விவசாயக் கூலித்தொழிலாளர்களுக்கு, கடந்த 1 மாதமாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த சட்டக்கூலி ரூ. 203-ஐ வழங்க வேண்டும். இப்பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். முதியோர் உதவித்தொகை கேட்டு மனு செய்தவர்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேவூர் கடைவீதியில் சாலை மறியல் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாதர் சங்க மாவட்டச் செயலர் லதா தலைமை வகித்தார்.
    தகவலறிந்த கீழ்வேளூர் வட்டாட்சியர் அமுதவிஜயரங்கன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர், அங்கு சென்று போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால், கீழ்வேளூர் - கச்சனம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai