சுடச்சுட

  

  தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெறும் முழு வேலை நிறுத்தத்துக்கு தார்மீக ஆதரவளிப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து அச்சங்கத்தின் நாகை மாவட்டச் செயலர் ஏ.டி. அன்பழகன் கூறியிருப்பது:
  தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி நீர் பிரச்னைக்காக நடைபெறும் வன்முறைகளைக் கண்டித்து விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களாலும் நடத்தப்படும் வேலை நிறுத்தத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தார்மீக ஆதரவைத் தெரிவித்துக்
  கொள்கிறது.
  மத்திய அரசு இரு மாநில அரசையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்க்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். நதிகளை தேசியமயமாக்கி நதிநீர் இணைப்புக்கான உரிய முயற்சியை எடுக்க வேண்டும்.
  ஆக்கிரமிப்பிலுள்ள நீர் நிலைகளை மீட்டெடுத்து, மழைநீரை சேமிக்கும் வசதியை ஏற்படுத்துதல், ஆற்று மணல் கடத்தலை தடுத்தல், ஆறு குளங்களை தூர்வாரி பராமரித்தல், மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை தடுப்பணைகள் கட்டி நிலத்தடி நீர்வளம் உயர வழிவகுத்தல் ஆகியவற்றின் மூலம் நீர்வளத்தை சேமித்து நிரந்தர தீர்வை காண முயல வேண்டும் எனக் கூறியுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai