சுடச்சுட

  

  முழு அடைப்புப் போராட்டத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் பங்கேற்கவுள்ளதால், அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் வியாழக்கிழமை இரவு கூட்டம் நிரம்பியிருந்தது.
  கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைக் கண்டித்து,  தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் அறிவித்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதையொட்டி, செப். 16-ஆம் தேதி காலை முதல் மாலை 6 மணி வரை பெட்ரோல், டீசல் விற்பனை கிடையாது என அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களிலும் அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
  இதனால், வெள்ளிக்கிழமை மாலை பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு வாகன ஓட்டிகள் வியாழக்கிழமை மாலை முதல் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக, அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களும் வாகன ஓட்டிகளால் களை கட்டியிருந்தன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai