Enable Javscript for better performance
திருக்குவளையில் 100 நாள் வேலைத் திட்ட ஊதியத்தை வழங்கக் கோரி சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    திருக்குவளையில் 100 நாள் வேலைத் திட்ட ஊதியத்தை வழங்கக் கோரி சாலை மறியல்

    By DIN  |   Published on : 16th September 2016 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய ஊரக வேலை உறுதித்  திட்டத்துக்கான ஊதியத் தொகையை வழங்கக் கோரி, திருக்குவளை கடைவீதியில் வியாழக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
    திருக்குவளை, வாழக்கரை, மேலவாழக்கரை ஆகிய பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றிய விவசாயக் கூலித்தொழிலாளர்களுக்கு  கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை  உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த சட்டக்கூலி ரூ. 203-ஐ வழங்க வேண்டும். இப்பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாட்டை நீக்க  வேண்டும். முதியோர் உதவித்தொகை கேட்டு மனு செய்தவர்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர்கள் மேகலா, லதா ஆகியோர் தலைமை வகித்தார். போராட்டத்தில் ஒன்றியச் செயலாளர்கள்  சுஜாதா, காவேரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் செல்வம், விவசாயத் தொழிலாளர்  சங்க மாவட்டச் செயலர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    தகவலறிந்த கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிமணி, திருக்குவளை வட்டாட்சியர் விஜயலட்சுமி மற்றும் போலீஸார் அங்கு சென்று போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், எட்டுக்குடி - திருக்குவளை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து
    பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai