Enable Javscript for better performance
நாகை, திருமருகலில் செப்டம்பர் 17 மின் நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    நாகை துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளையொட்டி, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு  சனிக்கிழமை (செப். 17) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அ. அப்துல் வஹாப் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், நாகை, திருமருகல், வேட்டைக்காரனிருப்பு துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது. துணை மின் நிலையம் வாரியாக மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
    நாகப்பட்டினம்: நாகை, வேளாங்கண்ணி, நாகூர், வெளிப்பாளையம், திட்டச்சேரி, ஓ.என்.ஜி.சி, மஞ்சக்கொல்லை, பரவை, பொய்கைநல்லூர், சிக்கல், தோணித்துறை.
    திருமருகல்: திருமருகல், மருங்கூர், எரவாஞ்சேரி, திருப்புகளூர், சீயாத்தமங்கை, போலகம், திருக்கண்ணபுரம்.
    வேட்டைக்காரனிருப்பு: திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai