சுடச்சுட

    

    நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம் பகுதிகளில் அண்ணா பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    மயிலாடுதுறையில்...
    அதிமுக: மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் தலைமையில், அதிமுகவினர் ஒன்றிணைந்து  மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
    இதில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவரும், கட்சியின்  ஒன்றியச் செயலருமான பா. சந்தோஷ்குமார்,  மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வி. பழனிசாமி, நகரச் செயலர் விஜிகே. செந்தில்நாதன், நகர அவைத் தலைவர் எஸ். அலி, நகர முன்னாள் செயலர் என். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
    திமுக: இதேபோல், திமுக சார்பில், கட்சியின் நாகை வடக்கு மாவட்டச் செயலர்  நிவேதா. முருகன் தலைமையில் ஒன்றிணைந்த கட்சியினர், கச்சேரி சாலையில் உள்ள திமுக  அலுவலகத்திலிருந்து பேரணியாக நடந்து சென்று, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
    இதில், கட்சியின் நகரச் செயலர் குண்டாமணி (எ) என். செல்வராஜ், வழக்குரைஞர்கள் சிவதாஸ்,  எஸ். சங்கரநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
    செம்பனார்கோயிலில்....
    செம்பனார்கோயில் மேலமுக்கூட்டில் உள்ள  அண்ணா சிலைக்கு திமுக மற்றும் அதிமுகவினர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    சீர்காழியில்...
    சீர்காழியில் நகர அதிமுக சார்பில், அண்ணா பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    சீர்காழி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகர அதிமுக செயலர் அ. பக்கிரிசாமி தலைமை வகித்தார். ஜெ. பேரவை செயலர் ஏ.வி. மணி, மாவட்ட பிரதிநிதி கார்த்தி, தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணைச் செயலர் பரணிதரன், மலையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி பங்கேற்று, அண்ணாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
    செலுத்தினார்.
    இதில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ஏ.கே. சந்திசேகரன், ஒன்றியச் செயலர் ராஜமாணிக்கம், துணைச் செயலர் ரவிச்சந்திரன், வழக்குரைஞர் தியாகராஜன், கலைவாணன் உள்ளிட்ட பலர்
    பங்கேற்றனர்.
    இதேபோல், வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரூர் கழகச் செயலர் போகர்.சி. ரவி தலைமையில் அண்ணாவின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டன. மாவட்ட பொருளாளர் வா. செல்லையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
     கொள்ளிடத்தில் ஒன்றியச் செயலர் ஜெயராமன் தலைமையில் அண்ணா பிறந்த நாள் விழா நடைபெற்றது.
    வேதாரண்யத்தில்...
    வேதாரண்யத்தில் அதிமுக சார்பில், அண்ணாவின் பிறந்த நாள் விழா  வியாழக்கிழமை நடைபெற்றது.
    வேதாரண்யம் மேலவீதியில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
    நகர்மன்றத் தலைவர் மலர்க்கொடி நமசிவாயம், ஒன்றியக்குழுத் தலைவர் சுசீலாதேவி சரவணன், நகரச் செயலர் எழிலரசு, நகர அவைத் தலைவர்  பழனிவேல், கிராம அலுவலர் சங்க முன்னாள் வட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், பிரமுகர்கள் பசுபதி, என். மாரியப்பன், நமச்சிவாயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர முன்னாள் செயலர் ஜெகநாதன் தலைமை வகித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai