Enable Javscript for better performance
முழு அடைப்புப் போராட்டத்துக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    முழு அடைப்புப் போராட்டத்துக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு

    By DIN  |   Published on : 16th September 2016 09:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை (செப். 16) நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும்,  நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம். தமிமுன் அன்சாரி வெளியிட்ட அறிக்கை:
    தமிழக முதல்வர் நடத்திய சட்டப்போராட்டத்தின் விளைவாக, காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை சகித்துக்கொள்ள முடியாத கர்நாடக மாநிலத்தவர் சிலர், தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் எதிரான வன்முறைகளில் ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
    இந்த அநீதிக்கு எதிராகவும், தமிழகத்தின் காவிரி நீர் உரிமைக்காகவும், தமிழகத்தைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் செப். 16-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து, ஆதரவு கோரியுள்ளன.
    இதுகுறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகக் குழு மேற்கொண்ட பரிசீலனையில், தமிழக மக்களின் நலன் காக்க, அரசியல் பேதங்களுக்கு அப்பாற்பட்டு நடைபெறும் இந்தப் போராட்டத்தை ஆதரிப்பது என மனிதநேய ஜனநாயக கட்சி தீர்மானித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai