சுடச்சுட

    

    கீழமூவர்க்கரையில் சூறாவளி காற்று: 20 படகுகள் சேதம், 3 மீனவர்கள் காயம்

    By DIN  |   Published on : 17th September 2016 06:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழியை அடுத்த கீழமூவர்க்கரை கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென வீசிய சூறாவளி காற்றால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 20 படகுகள் சேதமடைந்தன. 3 மீனவர்கள் காயமடைந்தனர்.
    கீழமூவர்க்கரை சுனாமி தெருவைச் சேர்ந்தவர் அ. ராமராஜ் (27). இவர் புதிதாக பைபர் படகு வாங்கியுள்ளார். அந்த படகுக்கு வெள்ளிக்கிழமை இரவு  கடற்கரையில் நிறுத்திவைத்து பூஜை செய்துள்ளார். அப்போது, திடீரென வீசிய சூறாவளி காற்றில் ராமராஜின் புதிய படகு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகளுடன் மோதியது. படகின் அருகே நின்று கொண்டிருந்த மீனவர்கள் ராமராஜ், மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த சி. குணசேகரன்(48), சிதம்பரம் வட்டம், கிள்ளை முழுக்குதுரையைச் சேர்ந்த த. பூவரசன் (19) ஆகிய  மூவரும் படகுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் 3 பேரும் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 20 படகுகள் சேதமடைந்தன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai