Enable Javscript for better performance
தமிழர் தேசிய முன்னணியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, மயிலாடுதுறையில் தமிழர் தேசிய முன்னணியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் நாகை மாவட்டத் தலைவர் இரா. முரளிதரன் தலைமை வகித்தார்.
    அமைப்பின் நிர்வாகிகள் ராசவேல், கவிஞர் பூபதி, ஆர். புஷ்பராஜ், ப. சுகுமாறன், பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ரசீத்கான், தமிழர் உரிமை இயக்க மாவட்ட அமைப்பாளர் அய்யா. சுரேசு ஆகியோர் பேசினர். இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் சங்க   மாவட்டத் தலைவர் எஸ். ராமு, மாவட்ட துணைத் தலைவர்   ஆர். சுகுமார், நகரப் பொருளாளர் செந்தில்நாதன், ஆட்டோ  ஓட்டுநர்கள் சங்கத்தைச் சேர்ந்த இரா. செல்வக்குமார் மற்றும் தமிழர் தேசிய முன்னணி அமைப்பினர்  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai