Enable Javscript for better performance
திருவாவடுதுறை ஆதீனத்தில் நூல் வெளியிட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    குத்தாலம் வட்டம், திருவாவடுதுறை ஆதீனத்தில் "தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர்  வாழ்வில் ஒரு நூறு நிகழ்வுகள்' நூல் வெளியிட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    திருவாவடுதுறை ஆதீனத்தில் ஆவணி வளர்பிறை சதுர்த்தசி நடராஜர் அபிஷேக திருநாள் நடைபெற்றது. மாலை ஆதீன வேணுவனலிங்க விலாசத்தில் நடைபெற்ற சமயவிரிவுரை நிகழ்ச்சியில், பெரம்பலூர்  மாவட்ட அரசு இசைப் பள்ளி தலைமை ஆசிரியர் சிவஞானவதி திருமுறை பாடினார்.
    சென்னை புத்தக வெளியீட்டாளர் சீனிவாசன், கும்பகோணம் ராமன் &  ராமன் நிறுவன சிவராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
    குடந்தை சங்கரநாராயணன் உலகெலாம் திருமுறை என்ற தலைப்பிலும், செம்பனார்கோயில் விஜயலட்சுமி "மாறிலா மகிழ்ச்சி' என்ற தலைப்பிலும்  சொற்பொழிவாற்றினர். கும்பகோணம் பாலசுப்பிரமணியன் எழுதிய "தமிழ்த்  தாத்தா உ.வே.சா. வாழ்வில் ஒரு நுறு நிகழ்வுகள்'  நூலை, ஆதீனம் 24 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாசாரிய சுவாமிகள் வெளியிட, அதன்  முதல் பிரதியை கும்பகோணம் ராமன் & ராமன் நிர்வாகி சிவராமன் பெற்றுக்கொண்டார்.
    பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளி தலைமை ஆசிரியர் சிவஞானவதிக்கு பொற்கிழி ரூ. 5,000 மற்றும் தெய்வத் தமிழிசைவாணி விருதை, ஆதீனம் குருமகா சன்னிதானம் வழங்கினார்.
    நூலாசிரியர் பாலசுப்பிரமணியன், பதிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர். இதில் ஆதீனப் புலவர்கள், சைவ சித்தாந்த பேராசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட பலர்  கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai