சுடச்சுட

  

  அளவுக்கு அதிகமான எடையில் நிலக்கரி ஏற்றிச் சென்ற 8 லாரிகள் வட்டாரப் போக்குவரத்து பிரிவு அலுவலர்களால் சிறைபிடிக்கப்பட்டன.
  காரைக்கால் தனியார் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு, நாகூர் - நாகை சாலைகளில் செல்லும் லாரிகள் தார்ப்பாய் கொண்டு மூடப்படாமல் செல்வதால், சாலைகள் மாசு ஏற்படுவதுடன், பொதுமக்களும் பல்வேறு பிரச்னைக்குள்ளாவதாக மாவட்ட நிர்வாகத்துக்குப் புகார்கள் வந்தன. இந்தப் புகார்கள் தொடர்பாக உரிய ஆய்வு மேற்கொள்ள நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி அறிவுறுத்தியதன்பேரில், நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பா. ஜெயபாஸ்கரன், மோட்டார் வாகன ஆய்வாளர் ப. ஜெய்சங்கர் ஆகியோர் வியாழக்கிழமை தொடர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அளவுக்கு அதிகமாக நிலக்கரி ஏற்றிச் சென்ற 8 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டன. இந்தத் தணிக்கை தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும் எனவும், அளவுக்கு அதிகமாக எடையை ஏற்றிச் செல்லும் லாரிகள், நிலக்கரியை தார்பாயைக் கொண்டு மூடாமல் செல்லும் லாரிகள் சிறைபிடிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai