சுடச்சுட

    

    வேதாரண்யத்தில் நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 17th September 2016 06:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான ஊதியத் தொகையை வழங்கக் கோரி, வேதாரண்யத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டம், வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்றது.
    தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றிய விவசாயக் கூலித்தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த சட்டக்கூலி ரூ. 203-ஐ வழங்க வேண்டும். காவிரி நீர் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் விரைவான தீர்வு கண்டு, கர்நாடகத்திடமிருந்து  தமிழகத்துக்குரிய நீரை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச்  செயலர் சிவகுரு. பாண்டியன் தலைமை  வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலர்  எம். செல்வராசு, பொருளாளர்  த. நாராயணன், ஊராட்சித் தலைவர்  இந்திராணி சுப்பிரமணியன், விவசாயத்  தொழிலாளர் சங்க நிர்வாகிகள்  மாரியப்பன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, பெண்கள் உள்ளிட்ட  நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்,  கோரிக்கையை வலியுறுத்தி முக்கிய  வீதிகள் வழியே பேரணியாகச் சென்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai