கீழமூவர்க்கரை பகுதியில் அமைச்சர் ஆய்வு
By DIN | Published on : 18th September 2016 04:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சீர்காழியை அடுத்த கீழமூவர்க்கரை கிராமத்தில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
சீர்காழி அருகேயுள்ள கீழமூவர்க்கரை சுனாமி தெருவைச் சேர்ந்த அ. ராமராஜ் (27). மீன்பிடி தொழில் செய்து வரும் இவர், வெள்ளிக்கிழமை இரவு தான் புதிதாக வாங்கிய பைபர் படகுக்கு கரையில் வைத்து பூஜை செய்துள்ளார். அப்போது, திடீரென வீசிய சூறாவளி காற்றால், கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன.
அப்போது, படகுகளின் அருகில் நின்று கொண்டிருந்த ராமராஜ், சி. குணசேகரன், த. பூவரசன் ஆகிய 3 மீனவர்களுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.தகவலறிந்த ஜவுளி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், கீழமூவர்க்கரை கிராமத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், சூறாவளி காற்றில் சேதமடைந்த படகுகளை அவர் பார்வையிட்டார்.
அப்போது, மக்களவை உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன், சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி, கோட்டாட்சியர் சுபா நந்தினி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சந்திரசேகரன், மாவட்ட பொருளாளர் செல்லையன், ஒன்றிய அதிமுக செயலர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.