Enable Javscript for better performance
கீழ்வேளூரில் பெரியார் சிலைக்கு மாலை- Dinamani

சுடச்சுட

    

    தந்தை பெரியாரின் 138-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கீழ்வேளூரில் உள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    நிகழ்ச்சிக்கு நகரச் செயலர் குணா தலைமை வகித்தார். ஒன்றியப் பொறுப்பாளர்கள் தங்கையன், ராஜேஷ், பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செய்தித் தொடர்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
    முன்னதாக, கீழ்வேளூர் கடைவீதியிலிருந்து ஊர்வலமாக வந்து அரசாணிக்குளம் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai