சுடச்சுட

  

  நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் டால்பின் ஒன்று இறந்து கரை ஒதுங்கிய விவரம் சனிக்கிழமை தெரிய வந்தது.
  கோடியக்கரை படகுத் துறை அருகேயுள்ள தனியார் மோட்டார் நீர் இறைப்பு நிலையப் பகுதியில் டால்பின் ஒன்று இறந்து கரை ஒதுங்கியது தெரிய வந்தது.
  கரை ஒதுங்கிய டால்பின் சுமார் 8 அடி நீளம், 4 அடி சுற்றளவு, 260 கிலோ எடையுள்ளதாக காணப்பட்டது. தகவலறிந்த கோடியக்கரை வனச்சரக அலுவலர் பழனிசாமி தலைமையிலான வனத்துறையினர், டால்பினை கைப்பற்றினர். வேதாரண்யம் அரசு கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவமனை மருத்துவர் சி. மீனாட்சிசுந்தரம், நிகழ்விடத்துக்குச் சென்று உடற்கூறு ஆய்வு செய்தார். அதன்பிறகு, டால்பின் புதைக்கப்பட்டது. கடந்த வாரம் இதேபோன்று, ஒரு சிறிய அளவிலான டால்பின் இதே பகுதியில் இறந்து கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai